ADDED : ஏப் 23, 2025 09:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'ராயல் என்பீல்டு' நிறுவனம், நடப்பு நிதியாண்டிற்குள், 750 சி.சி., பிரிவில் புதிய பைக்கை அறிமுகம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இது, 'கபே ரேஸர்' பைக்காக வடிவமைக்கப்படும் எனவும் தெரிய வந்துள்ளது.
இந்நிறுவனம் 'ஆர்1இ' என்ற குறியீட்டு பெயரில், 750 சி.சி., இன்ஜின் தளத்தை உருவாக்கி வருகிறது. இந்த இன்ஜின்,இந்நிறுவனத்தின் 650 சி.சி., இன்ஜினை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படுகிறது.
என்பீல்டின், 650 சி.சி., பைக் அணிவகுப்பின் விலை வரம்பு, 3.03 லட்சத்தில் இருந்து 3.99 லட்சம் ரூபாய் வரை உள்ளது. தற்போது வடிவமைப்பில் உள்ள இந்த 750 சி.சி., பைக்கின் விலை, 4 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.

