ADDED : ஜூலை 22, 2026 07:41 AM

'யமஹா' நிறுவனம், 'எப்.ஜி., ப்ளூ பிளக்ஸ்' என்ற 85 சதவீத எத்தனால் கலப்பு பெட்ரோலில் இயங்கும் பைக்கை அறிமுகம் செய்துள்ளது. 'சுசூகி ஜிக்சர் எஸ்.எப்., 250', 'ஹீரோ ஸ்ப்ளெண்டர், டீலக்ஸ்' ஆகிய 'இ85' பைக்குகளை தொடர்ந்து, இந்த பைக் வந்துள்ளது.
இதன் இன்ஜின், இ20 முதல் இ85 பெட்ரோலில் இயங்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதில், 149 சி.சி., ஏர் கூல்டு இன்ஜின் வந்துள்ளது. அடிப்படை மாடல் எப்.ஜி., பைக்கை ஒப்பிடுகையில், 0.7 ஹெச்.பி., பவர் மற்றும் 0.5 என்.எம்., டார்க் குறைக்கப்பட்டுள்ளது. இ85 பெட்ரோலில் இன்ஜின் பாதுகாப்பாக இயங்க, பவர் மற்றும் டார்க் சற்று குறைக்கப்பட்டுள்ளது.
கருப்பு நிறத்தில் கிடைக்கும் இந்த பைக்கில், எல்.இ.டி., ஹெட் லைட், பெட்ரோல் டேங்க், சிங்கிள் பீஸ் சீட், 5 - ஸ்பீடு கியர்பாக்ஸ், டெலிஸ்கோப்பிக் மற்றும் மோனோஷாக் சஸ்பென்ஷன்கள், சிங்கிள் சேனல் ஏ.பி.எஸ்., உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. கிரவுண்ட் கிளியரன்ஸ் 30 எம்.எம்., குறைந்து, 135 எம்.எம்.,மாக உள்ளது.
