சாலை போக்குவரத்துக்கு தகுதி பெற்ற முதல் மின்சார டிப்பர்
சாலை போக்குவரத்துக்கு தகுதி பெற்ற முதல் மின்சார டிப்பர்
ADDED : அக் 16, 2024 08:29 AM

'ப்ரொப்பல் இண்டஸ்ட்ரீஸ்' நிறுவனத்தின் '470 ஹெச்.இ.வி.,' என்ற மின்சார டிப்பர் லாரி மத்திய அரசின் பாதுகாப்பு தரங்களுக்கு இணங்க சாலை போக்குவரத்துக்கு தகுதியானது என்ற தர சான்றிதழை பெற்றுள்ளது, இது, இந்தியாவின் முதல் மின்சார டிப்பர் லாரி ஆகும்.
இதுகுறித்து ப்ரொப்பல் நிறுவனத்தின் நிர்வாகஇயக்குனர் செந்தில் குமார் பேசியதாவது:
இந்த மின்சார டிப்பர் லாரி ஆப்ரோடு பயன்பாட்டுக்கு உருவாக்கப்பட்டது. ஆனால், இந்த சான்றிதழை பெற்றுள்ளது, எங்கள் எல்லைகளை விரிவு படுத்துவது மட்டுமின்றி, தொழில்துறை வளர்ச்சியின் தேவைகளை பூர்த்தி செய்து புதுமையான தீர்வுகளையும் வழங்க உதவுகிறது. இது, இந்தியாவின் சுரங்கம் மற்றும் கட்டுமான துறையில் குறிப்பிடத்தக்க மைல்கல் ஆகும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த லாரி, 385 மற்றும் 256 கி.வாட்.ஹார்., ஆகிய இரு பேட்டரி வகையில் வருகிறது. காம்பாக்ட் வீல் பேஸ், குறைந்த டர்னிங் ரேடியஸ், பாஸ்ட் சார்ஜிங், லிக்விட் கூல்டு மோட்டார், ஆட்டோ டிரான்ஸ்மிஷன், ஏ.பி.எஸ்., உள்ளிட்ட பல அம்சங்கள்இதில் உள்ளன.