ADDED : ஜூலை 03, 2024 09:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'ஹீரோ மோட்டோகார்ப்' நிறுவனம், அதன் புதிய 'சென்டெனியல்' என்ற சிறப்பு எடிஷன் பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிறுவனத்தின் நிறுவனரான பிரிஜ்மோகன் லால் முன்ஜாலின் 101வது நினைவு தினத்தை முன்னிட்டு, அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் வெறும் 100 பைக்குகள் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன.
தன் பணியாளர்கள், கூட்டாளிகள், தொழில் பங்குதாரர்கள் ஆகியோருக்கு மட்டுமே இந்த பைக் ஏலம் விடப்படும் என இந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் மூலம் கிடைக்கும் வருமானம், சமூக நலனுக்காக பயன்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹீரோ கரிஷ்மா பைக்கை அடிப்படையாகக் கொண்டு மிக குறைந்த எடையில் இந்த பைக் தயாரிக்கப்படுகிறது. பைக் எங்கும் கார்பன் பைபர், முழு அட்ஜெஸ்டபிள் சஸ்பென்ஷன், ஒரு நபர் சீட் ஆகிய அம்சங்களுடன் இந்த பைக் வருகிறது.