தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கடையாணி/பெங்களூரு, மும்பை, புதுடில்லியில் ஹோண்டா பேட்டரி பரிமாற்றம் நிலையம்

பெங்களூரு, மும்பை, புதுடில்லியில் ஹோண்டா பேட்டரி பரிமாற்றம் நிலையம்

பெங்களூரு, மும்பை, புதுடில்லியில் ஹோண்டா பேட்டரி பரிமாற்றம் நிலையம்


ADDED : டிச 12, 2024 08:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 12, 2024 08:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

'ஹோண்டா' நிறுவனம், அண்மையில் இரு மின்சார ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தியது. இதில் 'ஆக்ட்டிவா இ' என்ற மின்சார ஸ்கூட்டர் மட்டும், பேட்டரி பரிமாற்றம் முறையில் இயங்குகிறது.

இந்த ஸ்கூட்டரின் பேட்டரியை பயனாளர் சார்ஜ் செய்ய முடியாது. அதற்கு பதிலாக, ஹோண்டாவின் பேட்டரி பரிமாற்றம் நிலையங்களை அனுகி, சார்ஜ் இல்லாத பேட்டரியை பரிமாற்றம் செய்து பயன்படுத்த வேண்டும்.

இதற்கான பேட்டரி பரிமாற்ற சேவையை ஹோண்டாவின் துணை நிறுவனமான 'ஹோண்டா பவர் பேக் எனர்ஜி' நிறுவனம் வழங்குகிறது. முதற்கட்டமாக, பெங்களூரு, மும்பை மற்றும் புதுடில்லி ஆகிய பெருநகரங்களில் இந்த சேவை வழங்கப்படுகிறது.

வரும் பிப்ரவரி முதல், பெங்களூரிலும், ஏபரல் முதல் மும்பை மற்றும் புதுடில்லியிலும் இது தொடங்கப்பட உள்ளன. ஹோண்டா மின்சார ஸ்கூட்டர்களின் பயன்பாடு அதிகரிக்கும் பட்சத்தில், படிப்படியாக 2026க்குள், பெங்களூரில் 500 ஆகவும், புதுடில்லியில் 150 ஆகவும், மும்பையில் 100 ஆகவும் அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us