ADDED : பிப் 12, 2025 09:07 AM
'ஹோண்டா' நிறுவனத்தின் அனைத்து கார்களும், 20 சதவீதம் எத்தனால் கலப்பு பெட்ரோலில் இயங்குவதாக, இந்திய வாகன ஆராய்ச்சி சங்கத்திடம் 'இ20' சான்றிதழை பெற்றுள்ளது. மத்திய அரசின் வாகன கொள்கையின் படி, ஏப்ரல் 2025 முதல் உற்பத்தி செய்யப்படும் வாகனங்கள் அனைத்தும், 20 சதவீதம் எத்தனால் கலப்பு எரிபொருளில் இயங்க வேண்டும். இதன் அடிப்படையில் இந்த சான்றிதழ் பெற்றுள்ளது, ஹோண்டா நிறுவனம்.
ஆனால், 2009 முதலே அனைத்து ஹோண்டா கார்களும், 20 சதவீதம் எத்தனால் கலப்பு பெட்ரோலில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டன. அதனால், 2009க்கு பிறகு ஹோண்டா கார்கள் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு, எத்தனால் கலப்பு எரிபொருள் தொடர்பான எந்த பாதிப்பும் வராது. எத்தனால் கலப்பு அல்லாத இன்ஜின்களில், 'இ20 பெட்ரோல்' பயன்படுத்தினால், ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் அரிப்பு, உலோகம் துருப்பிடிப்பு உள்ளிட்டவை ஏற்படும் அபாயம் உள்ளது.

