ஹோண்டா சிட்டி 2026 குளுகுளு சிட், 360 கேமரா, அடாஸ் வருகை
ஹோண்டா சிட்டி 2026 குளுகுளு சிட், 360 கேமரா, அடாஸ் வருகை
UPDATED : மே 27, 2026 07:30 AM
ADDED : மே 27, 2026 07:23 AM

'ஹோண்டா கார்ஸ்' நிறுவனம், அதன் 'சிட்டி' செடான் காரை மேம்படுத்தி, 2026 மாடலில் அறிமுகம் செய்துள்ளது. இந்த கார், எட்டு மாடல்களில் கிடைக்கிறது.
ஏற்கனவே உள்ள 1.5 லிட்டர், என்.ஏ., மற்றும் ஸ்ட்ராங் ஹைபிரிட் பெட்ரோல் என இரு இன்ஜின்கள் இந்த கார் வந்துள்ளது. கியர்பாக்ஸ், இதர இயந்திர மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை.
அடிப்படையாக ஆறு காற்று பைகள், அடாஸ் லெவல் 2 வசதி, 360 டிகிரி கேமரா, 8 - ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், ஒயர்லெஸ் இணைப்பு மற்றும் சார்ஜிங் வசதிகள், 10.1 அங்குல இரு டிஸ்ப்ளேக்கள், சன் ரூப் வென்ட்டிலேட்டட் முன்புற சீட்கள் ஆகிய அம்சங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. பேனரோமிக் சன் ரூப், பவர்டு சீட்கள், டர்போ மற்றும் டீசல் இன்ஜின்கள் வரவில்லை.
![]() |
காரின் நீளம் 11 எம்.எம்., அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், ஸ்போர்ட்டி முன்புற, பின்புற பம்பர்கள், எல்.இ.டி., ஹெட் லைட், கனெக்டட் டி.ஆர்.எல்., 16 அங்குல சக்கரங்கள், உட்புற டேஷ் போர்டு ஆகியவை மேம்படுத்தப்பட்டுள்ளன.

