ADDED : ஏப் 08, 2025 11:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'கைலாக்' காம்பேக்ட் எஸ்.யூ.வி., காரின் அறிமுக விலை, இந்த மாதம் 30ம் தேதி வரை தொடரும் என 'ஸ்கோடா' நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் விலை, 7.89 லட்சம் முதல் 14.40 லட்சம் ரூபாய் வரை உள்ளது.
இந்த கார், 'கிளாசிக்', 'சிக்னேச்சர்', 'சிக்னேச்சர் பிளஸ்' மற்றும் 'பிரஸ்டீஜ்' ஆகிய நான்கு மாடல்களில் வந்துள்ளது. இதில், அடிப்படை மாடலான 'கிளாசிக்', முன்பதிவு துவங்கிய முதல் 10 நாட்களில், 10,000 முன்பதிவுகளை பெற்றது. முதல் 33,000 கார்கள், அடுத்த மாதம் வினியோகமாக உள்ளது.
ஆண்டுக்கு, 50,000 முதல் 70,000 கைலாக் கார்களை, இந்நிறுவனம் உற்பத்தி செய்ய உள்ளது. இதை, இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்ய இருப்பதாக வும் கூறப்படுகிறது. 2026ம் ஆண்டுக்குள், 1 லட்சம் ஆண்டு விற்பனைகளை செய்ய இந்நிறுவனம் இலக்கு வைத்துள்ளது.

