ADDED : நவ 19, 2025 08:04 AM

'கவாசாகி' நிறுவனம், 'இசட்1100' என்ற நேக்கட் ஸ்ட்ரீட் பைட்டர் பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
'நின்ஜா 1100 எஸ்.எக்ஸ்.,' பைக்கில் வரும் அதே சேசிஸ் தான், இந்த பைக்கிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில், 1,099 சி.சி., லிக்விட் கூல்டு, இன்லைன் 4 - சிலிண்டர் இன்ஜின் வந்துள்ளது. இந்த இன்ஜினுடன் 6 - ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. கியர் மாற்றுவதை எளிதாக்க, ஸ்லிப் அண்டு அசிஸ்ட் கிளட்ச் மற்றும் பைடைரக்சுனல் குயிக் ஷிப்டர் வசதி கிடைக்கிறது. டாப் ஸ்பீடு 247 கி.மீ.,ராக உள்ளது.
221 கிலோ எடை உள்ள இந்த பைக்கில், 17 லிட்டர் டேங்க், 5 அங்குல டி.எப்.டி., டிஸ்ப்ளே, டிராக் ஷன் கன்ட்ரோல், கார்னரிங் ஏ.பி.எஸ்., க்ரூஸ் கன்ட்ரோல், புளூடூத் இணைப்பு வசதி, நேவிகேஷன், முழு அட்ஜஸ்டபில் சஸ் பென்ஷன்கள் என பல்வேறு அம்சங்கள் இருக்கின்றன.

