ADDED : ஆக 21, 2024 09:19 AM

'கொபெல்கோ' கட்டுமான இயந்திர நிறுவனம், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 'எஸ்.கே., - 80' என்ற நடு ரக எக்ஸ்கவேட்டரை அறிமுகப்படுத்தி உள்ளது. இதனை, கொபெல்கோ நிறுவன நிர்வாக இயக்குனர்,தலைமை செயல் அதிகாரியுமான டக்கிமிச்சி ஹிராகாவா மற்றும் இந்நிறுவன இயக்குனர் மோசஸ் எடி ஆகியோர் அறிமுகப்படுத்தினர்.
ஆந்திராவின் ஸ்ரீ சிட்டி பகுதியில் உள்ள இந்நிறுவன ஆலையில் இந்த இயந்திரம் தயாரிக்கப்படுகிறது. பொதுவாக எக்ஸ்கவேட்டர்கள், மண், கற்கள் உள்ளிட்டவற்றை தோண்டுவதற்கு, நகர்த்துவதற்கு அல்லது கொண்டு செல்வதற்கு பயன்படுத்தப்படும் இயந்திரம் ஆகும்.
இந்த புதிய எக்ஸ்கவேட்டரில், 2,200 சி.சி., 4 சிலிண்டர், 'யான்மார்' இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது. நவீன தொழில்நுட்பம் மற்றும் ஹைட்ராலிக் அமைப்புகள், சிறந்த ஓட்டுனர் வசதி, குறைந்த எரிவாயு செலவு மற்றும் பராமரிப்பு உள்ளிட்டவற்றை இதன் சிறப்பம்சங்களாக இந்நிறுவனம் சொல்கிறது.