கே.டி.எம்., 250 எஸ்.எக்ஸ்., - எப் ஆப்ரோட் சாகசங்களுக்கு டெர்ட் பைக்
கே.டி.எம்., 250 எஸ்.எக்ஸ்., - எப் ஆப்ரோட் சாகசங்களுக்கு டெர்ட் பைக்
ADDED : நவ 27, 2024 08:56 AM

'கே.டி.எம்.,' நிறுவனம், '250 எஸ்.எக்ஸ்., - எப்' என்ற புதிய டெர்ட் பைக்கை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த பைக், மோட்டோகிராஸ் டிராக்கில் மட்டுமே பயன்படுத்த முடியும்.
இது போன்று, மொத்தம் ஆறு பைக்குகளை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. அதில், 50 சி.சி., 65 சி.சி., மற்றும் 85 சி.சி., பைக்குகள் சிறுவர்களுக்கும், 250 சி.சி., 350 சி.சி., மற்றும் 450 சி.சி., பைக்குகள் பெரியவர்களுக்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த 250 எஸ்.எக்ஸ்., - எப் பைக்கில், 249.9 சி.சி., சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் எடை வெறும் 104 கிலோவாக இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. எவ்வித கரடுமுரடான நிலப்பரப்புகள் மற்றும் மலைப்பாதைகளிலும், இந்த பைக்கை எளிதாக இயக்க முடியும்.டபுள் கிராடில் ஸ்டீல் ப்ரேமில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த பைக்கில், 21 மற்றும் 18 அங்குல அலாய் சக்கரங்கள், டெலிஸ்கோபிக் போர்க் மற்றும் மோனோ ஷாக் சஸ்பென்ஷன்கள், 958 எம்.எம்., சீட் உயரம் மற்றும் 343 எம்.எம்., கிரவுண்ட் கிளியரன்ஸ் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.
கூடுதலாக, ஆப்ரோடு பைக்குகளுக்கு தேவையான, லாஞ்ச் கன்ட்ரோல், குயிக் ஷிப்டர் வசதிகளும் இதில் உள்ளன. இந்த பைக், கவாசாக்கி 'கே.எக்ஸ்., - 250' டெர்ட் பைக்கிற்கு கடும் போட்டியாக உள்ளது.