'யூவோ டெக் பிளஸ் 475 டி.ஐ.,' டிராக்டர் ஆறு ஆண்டு உத்தரவாதம் வழங்கும் 'மஹிந்திரா'
'யூவோ டெக் பிளஸ் 475 டி.ஐ.,' டிராக்டர் ஆறு ஆண்டு உத்தரவாதம் வழங்கும் 'மஹிந்திரா'
ADDED : அக் 15, 2025 07:54 AM

'மஹிந்திரா டிராக்டர்ஸ்' நிறுவனம், அதன் 'யூவோ டெக் பிளஸ் 475 டி.ஐ.,' என்ற புதிய டிராக்டரை அறிமுகம் செய்துள்ளது.
இது, தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் விற்பனையில் உள்ளது. இந்த டிராக்டர், விவசாய பணிகள், கிராமப்புற சரக்கு போக்குவரத்து பணிகளுக்கு பொறுத்தமாக இருக்கும்.
இந்த டிராக்டரில், மஹிந்திராவின் புதிய 2,980 சி.சி., 'எம் - புல்' என்ற 3 - சிலிண்டர், லிக்விட் கூல்டு, டீசல் இன்ஜின் பயன்படுத்தப் படுகிறது. இது, 42 ஹெச்.பி., பவரையும், 191 என்.எம்., டார்க்கையும் வெளிப்படுத்துகிறது.
அதிக சுமையின் போது, 28 சதவீதம் கூடுதல் இழுவை திறனை இந்த இன்ஜின் வெளிப் படுத்தும். 2 - வீல் மற்றும் 4 - வீல் டிரைவ் அமைப்பு களில் வரும் இந்த டிராக்டரில், 12 பிரண்ட், மூன்று ரிவர்ஸ் கியர்கள் கொண்ட டி.சி.டி., கியர்பாக்ஸ் பயன்படுத்தப் படுகிறது.
விவசாய பணியில் ஈடுபடும் டிராக்டர்களில் பொருத்தப்படும் இணைப்புகளை, வெவ் வேறு வேகங்களில் இயக்கலாம். இதில் உள்ள ஹைட்ராலிக் அமைப்பு, 2,000 கிலோ எடையை தூக்கும் அளவுக்கு பலமானது.
நீண்ட நேரம் ஓட்டுனர் சோர்வடையாமல் இருக்க, பவர் ஸ்டீயரிங், கேபினுக்குள் நல்ல இட வசதி உள்ளிட் டவை வழங்கப் ப டு கின் றன. எந்த நிறுவனமும் இதுவரை வழங்காத 6 - ஆண்டு உத்தரவாதத்தை மஹிந்திரா நிறுவனம் வழங்குகிறது.