மஹிந்திரா ‘எக்ஸ்.யூ.வி., 3எக்ஸ்.ஒ., ஜி.என்.ஜி.,’ 25 கி.மீ., மைலேஜ், 12 வினாடியில் 100 கி.மீ., பிக்கப்
மஹிந்திரா ‘எக்ஸ்.யூ.வி., 3எக்ஸ்.ஒ., ஜி.என்.ஜி.,’ 25 கி.மீ., மைலேஜ், 12 வினாடியில் 100 கி.மீ., பிக்கப்
UPDATED : அக் 21, 2026 12:00 AM
ADDED : அக் 20, 2026 08:32 PM

‘ம ஹிந்திரா’ நிறுவனம், ‘எக்ஸ்.யூ.வி., 3எக்ஸ்.ஒ., ஜி.என்.ஜி.,’ என்ற அதன் முதல் சி.என்.ஜி., எஸ்.யூ.வி., காரை அறிமுகம் செய்துள்ளது. சி.என்.ஜி., பெட்ரோல் ஆகிய இரு எரிபொருளிலும் இயங்கும் போது, எந்தவித செயல்திறன் வித்தியாசம் வராத அளவுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது, இதன் சிறப்பம்சம் ஆகும்.
இதில், 1.2 லிட்டர், எம்.பி.எப்.ஐ., டர்போ பெட்ரோல் – சி.என்.ஜி., இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது. பெட்ரோலுக்கு நிகரான சி.என்.ஜி., பவர் மற்றும் டார்க்கை வெளிப்படுத்தும் இந்த இன்ஜின், 6 – ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆட்டோ கியர்பாக்ஸ் இல்லை. ஒரு கிலோ சி.என்.ஜி., எரிபொருளில், 24.7 கி.மீ., மைலேஜ், 12 வினாடியில் 100 கி.மீ., பிக்கப், 270 லிட்டர் பூட் ஸ்பேஸ் கிடைக்கிறது. வெளிப்புற உட்புற மாற்றங்கள் எதுவும் இல்லை.
மொத்தம் ஐந்து மாடல்களில் வரும் இந்த காரில், மாடலை பொறுத்து பேனரோமிக் சன் ரூப், லெதர் சீட்கள், 10.25 அங்குல இரு டிஸ்ப்ளேக்கள், கார் இணைப்பு வசதிகள், 6 காற்று பைகள், உற்பத்தி ஆலையில் பொருத்தப்படும் சி.என்.ஜி., கிட் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படுகின்றன.
