போக்ஸ்வேகன் கார்களுக்கு 'மேனுவல் கியர்பாக்ஸ்' நிறுத்தம்
போக்ஸ்வேகன் கார்களுக்கு 'மேனுவல் கியர்பாக்ஸ்' நிறுத்தம்
ADDED : ஜன 21, 2026 07:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'போக்ஸ்வேகன்' நிறுவனம், அதன் அனைத்து வகை 'விர்டுஸ்' மற்றும் 'டைகன்' கார்களுக்கு, மேனுவல் மற்றும் 7 - ஸ்பீடு டி.எஸ்.ஜி., ஆட்டோ கியர்பாக்ஸ் வழங்கி வந்தது. இந்நிலையில், அந்த கார்களின் '1.5 லிட்டர், டி.எஸ்.ஐ., டர்போ பெட்ரோல்' இன்ஜின் மாடல்களுக்கு, 'மேனுவல் கியர்பாக்ஸ்' நிறுத்தப்பட்டு, ஆட்டோ கியர் பாக்ஸில் மட்டுமே கிடைக்கின்றன.
அதாவது, '1 லிட்டர், டி.எஸ்.ஐ., டர்போ பெட்ரோல்' இன்ஜின் கொண் ட கார்களுக்கு மட்டுமே, மேனுவல் கியர்பாக்ஸ் கிடைக்கிறது. அதனால், 1.5 லிட்டர் இன்ஜின் கொண்ட காரின் ஆரம்ப விலை, 1.80 லட்சம் ரூபாய் அதிகரித்துள்ளது.
'விர்டுஸ் ஜி.டி ., பிளஸ் குரோம் டி.சி.டி.,' காரின் விலை, ரூ. 18.80 லட்சத்திலும், 'டைகன் ஜி.டி., பிளஸ் குரோம் டி.சி.டி.,' காரின் விலை, ரூ.18.95 லட்சத்திலும் துவங்குகின்றன.

