தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கடையாணி/மாருதி 'பிரெசா' எஸ்-.யூ.வி., 'டர்போ' பெட்ரோல், '5 ஸ்டார்' ரேட்டிங்

மாருதி 'பிரெசா' எஸ்-.யூ.வி., 'டர்போ' பெட்ரோல், '5 ஸ்டார்' ரேட்டிங்

மாருதி 'பிரெசா' எஸ்-.யூ.வி., 'டர்போ' பெட்ரோல், '5 ஸ்டார்' ரேட்டிங்


UPDATED : ஜூலை 29, 2026 07:56 AM

ADDED : ஜூலை 29, 2026 07:48 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 29, 2026 07:56 AM ADDED : ஜூலை 29, 2026 07:48 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'மாருதி சுசூகி' நிறுவனம், 'பிரெசா' சப் காம்பேக்ட் எஸ்.யூ.வி., காரை மேம்படுத்தி, அறிமுகம் செய்துள்ளது. இதில், இயந்திர மாற்றங்கள் மற்றும் கூடுதல் அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த கார், என்.ஏ., டர்போ மைல்டு ஹைபிரிட் பெட்ரோல், சி.என்.ஜி., ஆகிய மூன்று மாடல்களில் வருகிறது. இது, 'பாரத் என்கேப்' கிராஷ் டெஸ்டில், 5 ஸ்டார் பெற்ற ஐந்தாவது மாருதி கார் ஆகும்.

ஏற்கனவே உள்ள 1.5 லிட்டர், 4 சிலிண்டர் என்.ஏ., ஹைபிரிட் பெட்ரோல் இன்ஜின் நீடிக்கிறது. முதல் முறையாக, 'பிரான்க்ஸ்' காரில் வரும், 1.0 லிட்டர், 3 - சிலிண்டர் டர்போ பெட்ரோல் ஹைபிரிட் இன்ஜின் மேம்படுத்தப்பட்டு, இந்த காரில் வழங்கப்பட்டுள்ளது. 1.5 லிட்டர் இன்ஜினுக்கு 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் எ.டி., ஆட்டோ கியர்பாக்ஸ்கள் கிடைக்கின்றன.

Image 1603646


ஆனால், டர்போ இன்ஜின், 6 - ஸ்பீடு மேனுவல் கியர்பாக்சில் மட்டுமே கிடைக்கிறது. பெட்ரோல் மைலேஜ் 20 முதல் 21 கி.மீ., வரையிலும், சி.என்.ஜி., மைலேஜ் 27 கி.மீ.,ரும் தருகிறது. கூடுதல் டயர் வழங்கப்படவில்லை.

வெளிப்புற மற்றும் உட்புற மாற்றங்கள் பெரிய அளவில் இல்லை. மேம்படுத்தப்பட்ட முன்புற கிரில், புதிய 16 அங்குல அலாய் சக்கரங்கள், 10 அங்குல டிஸ்ப்ளே, லெதர் மற்றும் முன்புற குளுகுளு சீட்கள், 6 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், காற்று சுத்திகரிப்பு வசதி, ஒயர்லெஸ் சார்ஜிங், போன் இணைப்பு வசதிகள், அலங்கார விளக்குகள், சில அடாஸ் அம்சங்கள், 6 காற்று பைகள் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த கார், மூன்று புதிய நிறங்கள் உட்பட ஒன்பது நிறங்களில் கிடைக்கிறது.

விலை - ரூ. 7.40 லட்சம்



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us