'மினி கன்ட்ரிமேன் சி' சென்னையில் உற்பத்தி, ரூ. 18.65 லட்சம் குறைவு
'மினி கன்ட்ரிமேன் சி' சென்னையில் உற்பத்தி, ரூ. 18.65 லட்சம் குறைவு
ADDED : ஜூன் 24, 2026 07:57 AM

'பி.எம்.டபுள்யூ.,' குழுமம், அதன் 'மினி கன்ட்ரிமேன் சி' என்ற சொகுசு எஸ்.யூ.வி., காரை அறிமுகம் செய்துள்ளது. இது, சென்னையில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் விலை, இறக்குமதியாகும் 'கன்ட்ரிமேன் ஜே.சி.டபுள்யூ.,' காரை விட, 18.65 லட்சம் ரூபாய் குறைவு.
பிரண்ட் வீல் டிரைவ் அமைப்பில் வரும் இந்த காரில், 'பி.எம்.டபுள்யூ., எக்ஸ் 1' காரில் இருக்கும் அதே 1.5 லிட்டர், 3 - சிலிண்டர், டர்போ பெட்ரோல் இன்ஜின் கிடைக்கிறது. இது, 7 - ஸ்பீடு கியர்பாக்சுடன் இணைக்கப்பட்டுள்ளது.
நீளம் 4.45 மீ உள்ள இந்த காரில், ஆக்டகனல் கிரில், மேட்ரிக்ஸ் எல்.இ.டி., டெயில் லைட், 19 அங்குல அலாய் சக்கரங்கள், பவர்டு, மசாஜ் சீட்கள், வட்ட வடிவ 9.4 அங்குல ஒ - எல்.இ.டி., டிஸ்ப்ளே, 360 டிகிரி கேமரா, பேனரோமிக் கிளாஸ் ரூப், பார்க் அசிஸ்ட், ஒயர்லெஸ் கார் இணைப்பு, ப்ளூடூத் வசதி, 6 காற்று பைகள், 12 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, பின்புற ரிக்லைன் சீட், அடாஸ் வசதி உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த கார் ஐந்து நிறங்களில் கிடைக்கிறது.
