ADDED : பிப் 05, 2025 08:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'கியா' நிறுவனம், அதன் புதிய 'சிரோஸ்' எஸ்.யூ.வி., காரின் விலையை அறிவித்துள்ளது. மொத்தம் ஆறு வகையில் வரும் இந்த காரின் விலை, 7.99 லட்சம் ரூபாய் முதல் 16.99 லட்சம் வரை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 3ம் தேதி முதல் இதன் முன்பதிவு துவங்கி உள்ள நிலையில், வினியோகம் இந்த மாதம் முதல் துவங்குகிறது.
இந்த காரில், 1 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் என்.ஏ., டீசல் ஆகிய இரு இன்ஜின்கள் வழங்கப்படுகின்றன. சோனெட் மற்றும் செல்டோஸ் எஸ்.யூ.வி., கார்களுக்கு இடையில் இந்த கார் இடம்பெற்றுள்ளது. சந்தையில் உள்ள, 'டாடா நெக்ஸான்', 'மாருதி பிரெசா', புதிய 'ஸ்கோடா கைலாக்', 'ஹூண்டாய் வென்யூ' ஆகிய கார்களுடன் இந்த சிரோஸ் போட்டி போடுகிறது.
டீலர்: VST Central KIA
போன்: 91 73051 90588