தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/கடையாணி/நிசான் 'கிராவைட்' எம்.பி.வி., நான்கு மீட்டரில், 7 - சீட்டர் கார்

நிசான் 'கிராவைட்' எம்.பி.வி., நான்கு மீட்டரில், 7 - சீட்டர் கார்

நிசான் 'கிராவைட்' எம்.பி.வி., நான்கு மீட்டரில், 7 - சீட்டர் கார்


UPDATED : பிப் 25, 2026 08:47 AM

ADDED : பிப் 25, 2026 07:50 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 25, 2026 08:47 AM ADDED : பிப் 25, 2026 07:50 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'நிசான்' நிறுவனம், 'கிராவைட்' என்ற எம்.பி.வி., காரை அறிமுகம் செய்துள்ளது. இது, 'ரெனோ ட்ரைபர்' காரை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. வெறும் 4 மீட்டர் நீளம் உள்ள இந்த காரில், 7 பேர் பயணிக்கலாம்.

இதில், 1 லிட்டர், 3 சிலிண்டர், என்.ஏ., பெட்ரோல் இன்ஜின் வந்துள்ளது. இந்த இன்ஜினுடன், 5 - ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏ.எம்.டி., ஆட்டோ கியர் பாக்ஸ் கிடைக்கிறது. மூன்றாவது வரிசை சீட்டை அகற்றி, ஐந்து சீட்டர் காராகவும் இதை பயன்படுத்தி கொள்ளலாம்.

Image 1540944


'மேக்னைட்' காரில் வருவதை போன்ற கிரில், எல்.இ.டி., லைட்டுகள், 8 மற்றும் 7 அங்குல டிஸ்ப்ளேக்கள், ஒயர்லெஸ் போன் சார்ஜர், க்ரூஸ் கன்ட்ரோல், மூன்று வரிசைக்கும் ஏ.சி., வென்ட்டுகள், டூயல் ஜோன் ஆட்டோ ஏ.சி., 6 காற்று பைகள், ஜே.பி.எல்., 4 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், டிராக்ஷன் கன்ட்ரோல், பார்க்கிங் சென்சார்கள் உள்ளிட்ட அம்சங்கள் இதில் இருக்கின்றன.

இந்த காருக்கு, 3 ஆண்டு அல்லது 1 லட்சம் கி.மீ., வரை அடிப்படை உத்தரவாதம் வழங்கப்படுகிறது. முதல் 5,000 வாடிக்கையாளர்களுக்கு, கார் பராமரிப்பு ஐந்து ஆண்டுகள் இலவசமாக வழங்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us