நிஸான் மேக்னைட் ஜப்பான் காரன், ஜப்பான் காரன் தான்!
நிஸான் மேக்னைட் ஜப்பான் காரன், ஜப்பான் காரன் தான்!
ADDED : அக் 09, 2024 08:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'நிஸான்' நிறுவனம், அதன் 'மேக்னைட்' எஸ்.யூ.வி., காரை புதுப்பித்து அறிமுகப்படுத்தி உள்ளது. இது, இந்தியாவின் குறைந்த விலை எஸ்.யூ.வி., காராகும். கூடுதல் குரோம் அலங்காரத்துடன் பெரிய கிரில், வெள்ளி நிற பம்பர்கள், புதிய 16 அங்குல அலாய் சக்கரங்கள், எம் வடிவ டெயில் லைட்டுகள் ஆகியவை அதன் வெளிப்புற மாற்றங்கள்.
உட்புறத்தில், டூயல் டோன் கேபின், சூரிய வெப்பம் தாக்கத்தை குறைக்க வடிவமைக்கப் பட்டுள்ள லெதர் சீட்டுகள், 4 வண்ண அலங்கார விளக்குகள், புதிய கிராபிக்ஸ் உடன் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், சி - டைப் சார்ஜிங் வசதி, 60 மீ ரேஞ்ச் கொண்ட ரிமோட் இன்ஜின் ஸ்டார்ட் மற்றும் ஆட்டோ லாக் வசதி ஆகியவை இதில் உள்ளன. பாதுகாப்புக்கு, 6 காற்று பைகள் அடிப்படையாக வழங்கப்படுகிறது.