நிஸானின் 'பிக் டாடி' எஸ்.யூ.வி., 2026ல் பேட்ரோல் அறிமுகம்
நிஸானின் 'பிக் டாடி' எஸ்.யூ.வி., 2026ல் பேட்ரோல் அறிமுகம்
ADDED : நவ 13, 2024 08:16 AM

கடந்த 60 ஆண்டுகளாக எஸ்.யூ.வி., உலகின் ராஜாவாக திகழும், 'நிஸான் பேட்ரோல்' கார், இந்தியாவில் அறிமுகமாக இருப்பது கார் பிரியர்களை குஷிப்படுத்தி உள்ளது. உலகின் வேகமான எஸ்.யூ.வி., காராக கருதப்படும் இந்த கார், தற்போது இடதுபுறம் டிரைவ் கொண்ட சந்தைகளில் மட்டுமே விற்பனையில் உள்ளது.
ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா மற்றும் நிஸான் நிறுவன தாய்நாடான ஜப்பான் ஆகிய நாடுகளில் வலதுபுற டிரைவ் கொண்ட எஸ்.யூ.வி.,க்களின் தேவை அதிகரித்துள்ளன. இதன் காரணமாக இந்த காரை, 2026ம் ஆண்டில் வலது புற டிரைவில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. உலக அளவில் நவீன மற்றும் அதிக செயல்திறன் கார்களை வைத்து இருக்கும் நிஸான் நிறுவனம், தற்போது இந்தியா வில் பவர் குறைந்த, மைலேஜ் கார்களை மட்டுமே அறிமுகம் செய்து வருகிறது. அதுவும் அந்த கார்கள் உள்நாட்டு கார் நிறுவனங்களுடன் போட்டி போட முடிவதில்லை.
இங்கு இந்த கார் அறிமுகமானால், நிஸானின் முழு திறன் இந்தியர்களுக்கு புரிய வருவது மட்டுமின்றி, இந்நிறுவனத்தின் பிராண்ட் மதிப்பும் பெருகும்.

