ADDED : ஏப் 08, 2025 11:50 PM

'ஜே.எல்.ஆர்.,' நிறுவனம், 'லேண்ட்ரோவர் டிபென்டர் ஆக்டா' எஸ்.யூ.வி., காரை மேம்படுத்தி அறிமுகம் செய்துள்ளது. இந்த கார், டிபென்டர் அணிவகுப்பின் சக்தி வாய்ந்த, அதிக ஆப்ரோட் திறன் கொண்ட கார் ஆகும். இதன் விலை, 2.59 கோடி ரூபாயாக உள்ளது.
இதில் வழங்கப்பட்டுள்ள, 'பி.எம்.டபிள்யூ.,'வின் 4.4 லிட்டர், வி8, டுவின் டர்போ, மைல்டு ஹைபிரிட் இன்ஜின் மேம்படுத்தப்பட்டுள்ளது. இது, 101 ஹெச்.பி., பவரையும், 125 என்.எம்., டார்க்கையும் கூடுதலாக வெளிப்படுத்துகிறது. 100 கி.மீ., வேகத்தை வெறும் 3.8 வினாடியில் எட்டுகிறது.
ஓட்டுநர் கட்டுப்பாட்டை அதிகரிக்க, '6டி' டைனமிக் சஸ்பென்ஷன் அமைப்பு, 319 எம்.எம்.,ல் கிரவுண்ட் கிளியரன்ஸ், 1 மீ., ஆழம் கொண்ட நீரில் பயணிக்கும் திறன், 68 எம்.எம்., அகலம் அதிகரிப்பு, 14 ஸ்பீக்கர் கொண்ட சவுண்டு சிஸ்டம் உள்ளிட்டவை இதில் செய்யப்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள்.

