ஒமேகா செய்கி வெக்ஸ்ட்ரா ஒரு லட்சம் ரூபாய்க்குள் புதிய இ.வி., ஸ்கூட்டர்
ஒமேகா செய்கி வெக்ஸ்ட்ரா ஒரு லட்சம் ரூபாய்க்குள் புதிய இ.வி., ஸ்கூட்டர்
UPDATED : பிப் 11, 2026 07:56 AM
ADDED : பிப் 11, 2026 07:35 AM

'ஒமேகா செய்கி மொபிலிட்டி' நிறுவனம், 'வெக்ஸ்ட்ரா' என்ற மின்சார ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தி, மின்சார இருசக்கர வாகன சந்தையில் நுழைந்துள்ளது.
மொத்த எடை 110 கிலோவில் இருக்கும் இந்த ஸ்கூட்டரில், 3.45 கி.வாட்.ஹார்., எல்.எப்.பி., பேட்டரி வந்துள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால், 110 கி.மீ., வரை பயணம் மேற்கொள்ளலாம். டாப் ஸ்பீடு, 70 கி.மீ.,ராக உள்ளது. இதில், 'ஐ.பி., 67' வாட்டர் ப்ரூப் பேட்டரி மற்றும் ஹப் மோட்டார் வழங்கப்படுகிறது. பேட்டரியை வீட்டு சார்ஜரில் முழு சார்ஜ் செய்ய, 5 மணி நேரம் எடுக்கிறது.
![]() |
மேலும் இதில், மூன்று ரைட் மோடுகள், 3.5 அங்குல எல்.சி.டி., டிஸ்ப்ளே, யூ.எஸ்.பி., சார்ஜிங் போர்ட், ரிவர்ஸ் பார்க்கிங், ஸ்மார்ட் போன் இணைப்பு வசதி, டெலிஸ்கோப்பிக் போர்க் மற்றும் டூயல் ஷாக் அப்சார்பர்கள், டிஸ்க் மற்றும் டிரம் பிரேக்குகள், 12 அங்குல அலாய் சக்கரங்கள் ஆகிய அம்சங்கள் கிடைக்கிறது. ஸ்கூட்டர் மற்றும் பேட்டரி உத்தரவாதம் குறித்து எந்த தகவலும் இல்லை.


