'பெர்பெட்டோ' இ.வி., ஸ்கூட்டர் 80 கி.மீ., ரேஞ்ச், 70 கி.மீ., டாப் ஸ்பீட்
'பெர்பெட்டோ' இ.வி., ஸ்கூட்டர் 80 கி.மீ., ரேஞ்ச், 70 கி.மீ., டாப் ஸ்பீட்
ADDED : பிப் 12, 2025 09:13 AM

'பி.என்.சி., மோட்டார்ஸ்' ஸ்டார்ட் அப் நிறுவனம், 'பெர்பெட்டோ' என்ற அதன் மின்சார ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தி உள்ளது.
இது, இந்நிறுவனத்தின் மூன்றாவது மின்சார ஸ்கூட்டர் ஆகும். பெர்பெட்டோ என்ற பெயருக்கு இத்தாலிய மொழியில் 'குறைபாடற்றது' என்று அர்த்தம். இந்த ஸ்கூட்டர் நான்கு நிறங்களில் வந்துள்ளது.
நகர்ப்புறத்துக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட இந்த ஸ்கூட்டரில், ஹப் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. அதோடு, பி.என்.சி., நிறுவனத்தின் 'ஈட்ரால் 40' என்ற 2.1 கி.வாட்.ஹார்ஸ் பவர் கொண்ட லித்தியம் அயான் பேட்டரியும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு முறை சார்ஜ் செய்தால், 80 கி.மீ., வரை செல்லும். டாப் ஸ்பீடு 70 கி.மீ.,ஆக உள்ளது. பாஸ்ட் சார்ஜிங் வாயிலாக, பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய இரண்டு மணி நேரம் ஆகும். இந்த ஸ்கூட்டரால், 16 டிகிரி அளவிலான மேடுகள், மலை பகுதிகளில் பயணம் செய்ய முடியும்.
இரு சக்கரங்களுக்கும் டிரம் பிரேக்குகள், டிஜிட்டல் டிஸ்ப்ளே, எல்.இ.டி., லைட்டுகள், ஸ்மார்ட்போன் ஹோல்டர் ஆகியவை இதில் உள்ளன. இந்த ஸ்கூட்டரின் சேசிஸ்க்கு ஏழு ஆண்டுகளும், பேட்டரி மற்றும் மோட்டாருக்கு, ஐந்து ஆண்டுகள் அல்லது 60,000 கி.மீ., வரையிலும் உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளன.