தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கடையாணி/எம்.ஜி., 'ஹெக்டர் டோமாஹாக்' எஸ்.யூ.வி., 40 கி.மீ., மைலேஜ் தரும் பிளக் இன் ஹைபிரிட்

எம்.ஜி., 'ஹெக்டர் டோமாஹாக்' எஸ்.யூ.வி., 40 கி.மீ., மைலேஜ் தரும் பிளக் இன் ஹைபிரிட்

எம்.ஜி., 'ஹெக்டர் டோமாஹாக்' எஸ்.யூ.வி., 40 கி.மீ., மைலேஜ் தரும் பிளக் இன் ஹைபிரிட்


ADDED : செப் 02, 2026 08:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 02, 2026 08:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'எம்.ஜி., மோட்டார்' நிறுவனம், 'ஹெக்டர் டோமாஹாக் பி.ஹெச்.இ.வி.,' என்ற முதல் 'பிளக் இன் ஹைபிரிட்' எஸ்.யூ.வி., காரை அறிமுகம் செய்துள்ளது. இந்த காரின் முன்பதிவு தொடங்கிய நிலையில், வினியோகம் நவம்பர் மாதம் முதல் துவங்குகிறது.

இந்த 7 - சீட்டர் காரில், 1.5 லிட்டர், 4 - சிலிண்டர், என்.ஏ., ஹைபிரிட் இன்ஜின் மற்றும் 20.5 கி.வாட்.ஹார்., பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜினுடன், ஹைபிரிட் டிரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளது. முழு டேங்க் மற்றும் சார்ஜில், 1,100 கி.மீ.,க்கும் அதிகமாக பயணிக்கலாம் என்றும், ஒரு லிட்டருக்கு 40 கி.மீ., வரை மைலேஜ் தருவதாகவும் இந்நிறுவனம் கூறுகிறது.

இ.வி., மோடில் மட்டும், 115 கி.மீ., ரேஞ்ச் தருகிறது. இந்த பேட்டரியை, 25 கி.வாட்., பாஸ்ட் சார்ஜரின் வாயிலாக 80 சதவீதம் சார்ஜ் செய்ய, 35 நிமிடம் எடுக்கிறது.

நீளம் 4.7 மீட்டர் உள்ள இந்த கார், இந்நிறுவனத்தின் 'அடாப்ட்' என்ற புதிய உற்பத்தி தளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. 18 அங்குல அலாய் சக்கரங்கள், 15.6 மற்றும் 8.8 அங்குல இரு டிஸ்பளேக்கள், ஒயர்லெஸ் போன் இணைப்பு வசதிகள் மற்றும் சார்ஜிங், 10 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், அலங்கார விளக்குகள், :டூயல் ஜோன் ஏ.சி., பவர்டு மற்றும் வென்ட்டிலேட்டட் சீட்கள், 6 காற்று பைகள், 360 டிகிரி கேமரா, அடாஸ் லெவல் 2 பாதுகாப்பு உள்ளிட்ட பல அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

விலை - ரூ. 25.70 முதல் ரூ. 27.80 லட்சம் வாடகை பேட்டரி - ரூ. 21.90 லட்சம் + 1 கி.மீ.,ருக்கு ரூ. 3.2



இன்ஜின் - 1.5 லிட்டர், என்.ஏ., பெட்ரோல் பவர் - 198 ஹெச்.பி., டார்க் - 230 என்.எம்., ரேஞ்ச் - 1,100 கி.மீ., டேங்க் - 52 லிட்டர் கிரவுண்ட் கிளியரன்ஸ் - 192 எம்.எம்., மைலேஜ் - 40 கி.மீ.,



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us