ADDED : ஜன 14, 2026 07:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'ரெனோ டஸ்டர்' எஸ்.யூ.வி., கார், நான்கு ஆண்டுகளுக்கு பின், குடியரசு தினமான ஜனவரி 26ம் தேதியன்று இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. இந்த காரின் நம்பகத் தன்மை, பாதுகாப்பு, இந்திய சூழலுக்கேற்ப வடிவமைப்பு ஆகியவற்றை சோதிக்க, 10 லட்சம் கி.மீ.,ருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது.
அதாவது, மைனஸ் 23டிகரி முதல், 55 டிகிரி வரை, ஆசியா, ஐரோப்பா, தென் அமெரிக்கா என, மூன்று கண்டங்களில் சோதனை செய்யப்பட்டுள்ளது. குளிர் பிரதேசங்கள், கடுமையான வெயில், நகர்ப்புற மற்றும் மலைப் பகுதிகள், தண்ணீர் தேக்கங்கள் என பல்வேறு பகுதிகளில், இந்த கார் சோதனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

