தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கடையாணி/ரெனோ 'கைகர்' எஸ்.யூ.வி., 'ஜிலு ஜிலு' சீட், ஒயர்லெஸ் இணைப்புகள்

ரெனோ 'கைகர்' எஸ்.யூ.வி., 'ஜிலு ஜிலு' சீட், ஒயர்லெஸ் இணைப்புகள்

ரெனோ 'கைகர்' எஸ்.யூ.வி., 'ஜிலு ஜிலு' சீட், ஒயர்லெஸ் இணைப்புகள்


UPDATED : ஆக 27, 2025 07:59 AM

ADDED : ஆக 27, 2025 07:58 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 27, 2025 07:59 AM ADDED : ஆக 27, 2025 07:58 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'ரெனோ' நிறுவனம், 'கைகர்' என்ற சப் காம்பேக்ட் எஸ்.யூ.வி., காரை மேம்படுத்தி, அறிமுகம் செய்துள்ளது.

இந்த காரின் சேசிஸ் பலப்படுத்தப்பட்டு, எடை குறைக்கப்பட்டுள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேசமயம், இன்ஜின் மற்றும் காற்றின் சத்தம், அதிர்வுகள் கேபினுக்குள் வராத அளவுக்கு உட்புறமும் மேம்படுத்தப்பட்டுள்ளது.

இதில், 1 லிட்டர், 3 சிலிண்டர், என்.ஏ., மற்றும் டர்போ பெட்ரோல் இன்ஜின்கள் வருகின்றன. இதில் உள்ள 'சிலிண்டர் போர்', அதிக மைலேஜ் மற்றும் இன்ஜின் எடை குறையும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த கார், 5 - ஸ்பீடு மேனுவல், ஏ.எம்.டி., மற்றும் சி.வி.டி., ஆட்டோ கியர்பாக்ஸ்களில் கிடைக்கின்றன.

Image 1461456


ரெனோ அடையாளம், முன்புற கிரில், பம்பர்கள், ஆட்டோ எல்.இ.டி., ஹெட் லைட் மற்றும் டெயில் லைட்டுகள் உள்ளிட்டவை புதுப்பிக்கப்பட்டுள்ளன. வென்ட்டிலேட்டட் முன்புற சீட்கள், 8 மற்றும் 7 அங்குல டூயல் டிஸ்ப்ளேக்கள், ஒயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ஸ்மார்ட் போன் இணைப்பு, இரு கிளவ் பாக்ஸ்கள், க்ரூயிஸ் கன்ட்ரோல் உள்ளிட்டவை புதிய அம்சங்கள். 6 காற்று பைகள் (அடிப்படை), 21க்கும் அதிகமான பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்படுகின்றன. இந்த கார், மொத்த 7 நிறங்களில் கிடைக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us