ரிவோல்ட் 'ஆர்.வி., பிளேஸ் எக்ஸ்' 'எக்ஸ்ட்ரா' ரேஞ்ச் இ.வி., பைக்
ரிவோல்ட் 'ஆர்.வி., பிளேஸ் எக்ஸ்' 'எக்ஸ்ட்ரா' ரேஞ்ச் இ.வி., பைக்
ADDED : மார் 05, 2025 01:23 PM

'ரிவோல்ட் மோட்டார்ஸ்' நிறுவனம், 'ஆர்.வி., பிளேஸ் எக்ஸ்' என்ற அதன் புதிய மின்சார பைக்கை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் முன்பதிவு துவங்கிய நிலையில், வினியோகம் இந்த மாதம் முதல் துவங்குகிறது.
இந்த பைக்கின் டிசைன், அச்சு அசல் 'ஆர்.வி., 1' பைக்கை போன்று உள்ளது. ஆனால், இந்த பைக்கில் கூடுதல் ரேஞ்ச் வழங்கும், 3.24 கி.வாட்.ஹார்., ஆற்றல் கொண்ட லித்தியம் அயான் பேட்டரி உள்ளது. இந்த பேட்டரியை பைக்கில் இருந்து அகற்ற முடியும். ஒரு சார்ஜில், 150 கி.மீ., வரை செல்லும் திறன் உடையது. இது, 'ஆர்.வி., 1' பைக்கை விட 50 கி.மீ., அதிகம் செல்லும். பாஸ்ட் சார்ஜர் மூலம், முழு சார்ஜ் செய்ய, 1 மணி நேரம் 20 நிமிடமும், அடிப்படை சார்ஜர் மூலம், 3 மணி நேரம் 30 நிமிடமும் எடுத்துக்கொள்கிறது. இந்த பைக்கில், 250 கிலோ எடை வரை சுமக்க முடியும்.
முன்புற டெலஸ்கோபிக் சஷ்பென்ஷன்கள் மற்றும் பின்புற டுவின் ஷாக் அப்சார்பர்கள், ஸ்மார்ட் போன் இணைப்பு மற்றும் டிராக்கிங் வசதி, 6 அங்குல எல்.சி.டி., டிஸ்ப்ளே, நேவிகேஷன் அசிஸ்ட், மூன்று ரைட் மோடுகள், ரிவர்ஸ் மோட் உள்ளிட்ட அம்சங்கள் இதில் உள்ளன.