ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் சீரிஸ் 2 இந்தியாவின் 'காஸ்ட்லி' எஸ்.யூ.வி.,
ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் சீரிஸ் 2 இந்தியாவின் 'காஸ்ட்லி' எஸ்.யூ.வி.,
ADDED : அக் 16, 2024 08:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'ரோல்ஸ் ராய்ஸ்' நிறுவனம், ஆறு ஆண்டுகளுக்கு பிறகு அதன் 'கல்லினன்' சொகுசு எஸ்.யூ.வி., காரை மேம்படுத்தி அறிமுகப்படுத்தி உள்ளது. இதற்கு 'கல்லினன் சீரிஸ் 2' என பெயரிடப்பட்டுள்ளது.
வெளிப்புறத்தில், ஒளிரும் பாரம்பரிய ரோல்ஸ் ராய்ஸ் கிரில், புதிய பம்பர்கள் மற்றும் எல் வடிவ டி.ஆர்.எல்., லைட்டுகள், 600 மீட்டர் தெளிவை கொடுக்கும் லேசர் ஹெட்லைட்டுகள் என, பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
சொகுசு லெதர் சீட்டுகள், புதிய கிராபிக்ஸ் கொண்ட 'ரோல்ஸ் ஸ்பிரிட்' இன்போடெயின்மென்ட் அமைப்பு, முழு கிளாசில் மறைக்கப்பட்ட டேஷ் போர்டு. ரோல்ஸ் ராய்ஸ் லோகோ கொண்ட சிறிய அனலாக் கடிகாரம் ஆகியவை இந்த காரின் உட்புற விசேஷம்.
பழைய கல்லினன் காரை விட, இந்த கார் 3.55 கோடி ரூபாய் அதிகம். இந்தியாவின் விலை உயர்ந்த எஸ்.யூ.வி., காராகவும் இது விளங்குகிறது.