ராயல் என்பீல்டு 'புல்லட் 650' பேரலல் ட்வின் இன்ஜினுடன் வருகை
ராயல் என்பீல்டு 'புல்லட் 650' பேரலல் ட்வின் இன்ஜினுடன் வருகை
ADDED : ஜூன் 10, 2026 07:19 AM

'ரா யல் என்பீல்டு' நிறுவனம், 'புல்லட் 650' பைக்கை அறிமுகம் செய்துள்ளது. 94 ஆண்டு கால புல்லட் வரலாற்றில், சக்தி வாய்ந்த பைக்காக இது உருவெடுத்துள்ளது.
'கிளாசிக் 650' பைக்கில் வரும் அதே, 648 சிசி பேரலல் ட்வின் இன்ஜின் கிடைக்கிறது. இந்த இன்ஜின் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஸ்டீல் டியூப் ளர் பிரேமில் கட்டமைக்கப்படும் இந்த பைக்கில், 43 எம்.எம்., டெலிஸ்கோ ப்பிக், டூயல் ஷாக் அப்சார்பர் சஸ்பென்ஷன்கள், 19, 18 அங்குல ஸ்போக் சக்கரங்கள், எல்.சி.டி., டிஸ்ப்ளே, கியர் இன்டிகேட்டர், அலுமினியம் ஸ்விட் ச் கியர், குரோமால் அலங்கரிக்கப்பட்ட இரு எக்ஸாட் டுகள், எல்.இ.டி., லைட்டுகள், 800 எம்.எம்., சீட் உயரம், 14.8 லி ட்டர் டேங்க் ஆகிய அம்சங்கள் கிடைக்கின்றன.
இ தில், ட்யூப் லெஸ் டயர், ப்ளூடூத் இணைப்பு, டிராக்ஷன் கன்ட்ரோல், க்ரூஸ் கன்ட்ரோல், அலாய் சக்கரங்கள் உள்ளி ட்ட அம்சங்கள் இல்லை.
