ADDED : மார் 05, 2025 01:28 PM

'மஹிந்திரா' நிறுவனம், 'ஸ்கார்பியோ என் கார்பன் எடிஷன்' என்ற கருப்பு எடிஷன் காரை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த எடிஷன், 'இசட்8' மற்றும் 'இசட்8எல்' ஆகிய இரு மாடல் கார்களுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றன. இதன் விலை, 20,000 ரூபாய் அதிகம்.
ஏழு சீட்டர் வகையில் மட்டுமே வரும் இந்த எடிஷனில், காரின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில், குரோம் குறைக்கப்பட்டு, முழுமையாக கருப்பு நிறம் வழங்கப்பட்டுள்ளது. அம்சங்களில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. இந்த காருக்கு, 2 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் இன்ஜின்கள் வழங்கப்படுகின்றன. 4 - வீல் டிரைவ் அமைப்பு டீசல் இன்ஜினில் மட்டுமே வருகிறது.
இந்த கார், 'டாடா ஹாரியர் டார்க் எடிஷன்' காருக்கு போட்டியாக உள்ளது. விலையை ஒப்பிடும் போது, மஹிந்திரா என் கார்பன் எடிஷன் காரின் விலை, 5,000 ரூபாய் அதிகமாக உள்ளது. இதன் விலை, 19.19 லட்சம் ரூபாய் முதல் 24.89 லட்சம் ரூபாயாக உள்ளது.