UPDATED : ஜன 29, 2025 09:10 AM
ADDED : ஜன 29, 2025 09:09 AM

'ராயல் என்பீல்டு' நிறுவனம், அதன் பழைய 'ஸ்கிராம் 411' பைக்கை மேம்படுத்தி, 'ஸ்கிராம் 440' என்று புதிய வகையில் அறிமுகப்படுத்தி உள்ளது. மொத்தம் ஐந்து நிறங்களில் வரும் இந்த பைக்கின் விலை, 2,000 முதல் 3,000 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
இது, 'ட்ரைல்' மற்றும் 'போர்ஸ்' என இரு மாடல்களில் வந்துள்ளது. ட்ரைல் மாடலுக்கு ஸ்போக் சக்கரங்களும், போர்ஸ் மாடலுக்கு அலாய் சக்கரங்களும் வழங்கப்படுகின்றன. இன்ஜின் பொறுத்த வரை, பழைய 411 சி.சி., இன்ஜின் மேம்படுத்தப்பட்டு, 443 .சி.சி., ஆக திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இன்ஜின் அதிர்வுகளை குறைக்க குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்துள்ளதாக இந்நிறுவனம் கூறி உள்ளது. மேலும், 5 ஸ்பீடுக்கு பதிலாக 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. எனவே, இந்த பைக்கின் எடை 2 கிலோ உயர்ந்து, 197 கிலோவாக உள்ளது. ஏ.பி.எஸ்., மற்றும் எல்.இ.டி., லைட்டுகள் அடிப்படை அம்சங்களாக வந்துள்ளன.