தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கடையாணி/'செல்டோஸ்' எஸ்.யூ.வி., 'கே - 3' தளத்தில் வரும் முதல் கியா கார்

'செல்டோஸ்' எஸ்.யூ.வி., 'கே - 3' தளத்தில் வரும் முதல் கியா கார்

'செல்டோஸ்' எஸ்.யூ.வி., 'கே - 3' தளத்தில் வரும் முதல் கியா கார்


UPDATED : ஜன 07, 2026 10:42 AM

ADDED : ஜன 07, 2026 07:56 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 07, 2026 10:42 AM ADDED : ஜன 07, 2026 07:56 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'கியா' நிறுவனம், அதன் 'செல்டோஸ்' எஸ்.யூ.வி., காரை மேம்படுத்தி, 2026 மாடலில் அறிமுகம் செய்துள்ளது.

இது, 'கே - 3' என்ற உலக கட்டுமான தளத்தில், உள்நாட்டில் உருவாக்கப்படும் முதல் கியா கார் ஆகும்.

இதனால், இந்த காரின் நீளம் 90 எம்.எம்., அகலம் 30 எம்.எம்., வீல் பேஸ் 80 எம்.எம்., அதிகரித்துள்ளது. அதிக உட்புற இடவசதி மற்றும் பூட் ஸ்பேஸ், அமைதியான கேபின் கிடைப்பதோடு, கிராஷ் டெஸ்ட்டில் இந்த கார், 5 - ஸ்டார் பெறும் எனவும் கூறப்படுகிறது.

Image 1518478


மேலும், இந்த கார், 1.5 லிட்டர், என்.ஏ., டர்போ பெட்ரோல் மற்றும் டீசல் என, மூன்று இன்ஜின்களில் கிடைக்கிறது. டர்போ பெட்ரோல் இன்ஜினுக்கு, மேனுவல் கியர்பாக்ஸ் வருவதில்லை.

மேம்படுத்தப்பட்ட வெளி ப்புற, உட்புற தோற்றம், 30 அங்குல பேனரோமிக் டிஸ்ப்ளே, டூயல் பேன் சன் ரூப், முன்புற பவர்டு மற்றும் வென்டிலேட்டட் சீட்கள், டூயல் ஜோ ன் ஏசி, 'டபுள் டி கட்' ஸ்டீயரிங் வீல், ஒயர் லெஸ் பாஸ்ட் சார்ஜிங், 91க்கும் அதிகமான ஸ்மார்ட் போன் இணைப்பு வசதிகள் என பல அம்சங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.

ஆறு காற்று பைகள், அடாஸ் லெவல் 2,360 டிகிரி கேமரா, எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், ஆல் வீல் டிஸ்க் என, 25க்கும் அதிகமான பாதுகாப்பு அம்சங்களும் கிடைக்கின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us