'சியரா' எஸ்.யூ.வி., டாடாவின் முதல் 'மிட் சைஸ்' எஸ்.யூ.வி.,
'சியரா' எஸ்.யூ.வி., டாடாவின் முதல் 'மிட் சைஸ்' எஸ்.யூ.வி.,
UPDATED : டிச 10, 2025 08:42 AM
ADDED : டிச 10, 2025 08:32 AM

'டாடா மோட்டார்ஸ்' நிறுவனம், அதன் 'சியரா' எஸ்.யூ.வி., காரை புதுப்பித்து, 22 ஆண்டுகளுக்கு பிறகு அறிமுகம் செய்துள்ளது. இது, மிட் சைஸ் எஸ்.யூ.வி., பிரிவில் வரும் இந்நிறுவனத்தின் முதல் கார் ஆகும்.
இந்த காரில் 4.3 மீட்டர் உள்ள புதிய 1.5 லிட்டர், 4 - சிலிண்டர் என்.ஏ., பெட்ரோல் மற்றும் டர்போ பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் என மூன்று இன்ஜின்கள் வருகின்றன. இன்ஜின் வகையை பொறுத்து, 6 - ஸ்பீடு மேனுவல், 6 - ஸ்பீடு மற்றும் 7 - ஸ்பீடு ஆட்டோ கியர்பாக்ஸ்கள் வழங்கப்படுகின்றன.
ஆனால், டர்போ பெட்ரோல் இன்ஜினுக்கு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படவில்லை. தற்போது, பிரண்ட் வீல் டிரைவ் அமைப்பில் மட்டுமே வரும் இந்த கார், 'ஆர்கோஸ்' என்ற பிரத்யேக கட்டுமான தளத்தில் உருவாக்கப் பட்டுள்ளது.
![]() |
மூன்று நவீன டிஸ்ப்ளேக்கள், 12 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம்,முன்புற வென்ட்டிலேட்டட் மற்றும் பவர்டு சீட்கள், முன் பயணி சீட்டை நகர்த்த பாஸ் மோட் வசதி, ஒயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ஸ்மார்ட் போன் இணைப்பு, டூயல் ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, பேனரோமிக் சன் ரூப், 19 அங்குல அலாய் சக்கரங்கள் உள்ளிட்ட பல அம்சங்கள் இதில் வந்துள்ளன.
ஆறு காற்று பைகள் அடிப்படை அம்சமாக வருகிறது. மேலும், அடாஸ் லெவல் - 2 வசதி, 360 டிகிரி கேமரா, எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், ஆட்டோ ஹோல்டு ஆகிய பாதுகாப்பு அம்சங்களும் கிடைக்கின்றன.


