தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கடையாணி/ஸ்கோடா 'குஷாக்' 2026 மசாஜ் சீட்டுடன் வரும் முதல் எ-ஸ்.யூ.வி.,

ஸ்கோடா 'குஷாக்' 2026 மசாஜ் சீட்டுடன் வரும் முதல் எ-ஸ்.யூ.வி.,

ஸ்கோடா 'குஷாக்' 2026 மசாஜ் சீட்டுடன் வரும் முதல் எ-ஸ்.யூ.வி.,


ADDED : ஜன 28, 2026 07:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 28, 2026 07:58 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'ஸ்கோடா' நிறுவனம், 'குஷாக்' எஸ்.யூ.வி., காரை மேம்படுத்தி, 2026 மாடலில் அறிமுகம் செய்துள்ளது. இது, சொகுசு கார்களில் வரும் பின்புற மசாஜ் சீட்டுடன் வரும் முதல் மிட் சைஸ் எஸ்.யூ.வி., கார் ஆகும்.

இந்த கார், 1 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர், டி.எஸ்.ஐ., டர்போ பெட்ரோல் இன்ஜினிகளில் வருகிறது. 1 லிட்டர், இன்ஜினுக்கு வந்த 6 - ஸ்பீடு டார்க் கன்வர்ட்டர் ஆட்டோ கியர்பாக்ஸ், தற்போது, 8 - ஸ்பீடாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இது, மென்மையான பயணத்தையும், காரின் மைலேஜை அதிகரிப்பதாக இந்நிறுவனம் கூறுகிறது.

கைலாக் காரில் இருப்பதை போன்ற முன்புற கிரில், குரோம் அலங்காரங்கள், ஸ்கோடா பெயருடன் வரும் டெயில் லைட் ஆகியவை காரின் தோற்றத்தை தனித்துவப்படுத்துகிறது.

சன் ரூப், ரிவர்ஸ் சென்சார், 6 காற்று பைகள், ரெயின் சென்சிங் வைப்பர், 25 க்கும் அதிகமான பாதுகாப்பு அம்சங்கள், அலாய் சக்கரங்கள், டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, எல்.இ.டி., லைட்டுகள், ஒயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்ப்ளே, 6 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் ஆகிய அம்சங்கள் அடிப்படையாக கிடைக்கின்றன.

பின்புற கேமரா, 17 அங்குல அலாய் சக்கரங்கள், வென்ட்டிலேட்டட், பவர்டு முன்புற சீட்கள், கூகுள் ஏ.ஐ., உதவி உள்ளிட்டவை உயர்ரக மாடலில் கிடைக்கிறது. அடாஸ் பாதுகாப்பு, 360 டிகிரி கேமரா வழங்கப்படவில்லை.

இன்ஜின் 1 லிட்டர், டர்போ 1.5 லிட்டர், டர்போ பவர் 115 ஹெச்.பி., 150 ஹெச்.பி., டார்க் 178 என்.எம்., 250 என்.எம்., கிரவுண்ட் கிளியரன்ஸ் 188 எம்.எம்., பூட் ஸ்பேஸ் 491 லிட்டர் டேங்க் 50 லிட்டர்



எதிர்பார்ப்பு விலை: ரூ. 11 முதல் ரூ. 20 லட்சம்



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us