'சேத்தக் சி25' இ., பஜாஜின் ஆரம்ப விலை மின்சார ஸ்கூட்டர்
'சேத்தக் சி25' இ., பஜாஜின் ஆரம்ப விலை மின்சார ஸ்கூட்டர்
UPDATED : ஜன 21, 2026 09:08 AM
ADDED : ஜன 21, 2026 08:56 AM

'பஜாஜ்' நிறுவனம், 'சேத்தக் சி25' என்ற ஆரம்ப விலை மின்சார ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. முன்பதிவு செய்யும் முதல் 10,000 பேருக்கு, 4,299 ரூபாய் சலுகை வழங்கப்படுகிறது.
வெறும் 107 கிலோ எடை உள்ள இந்த ஸ்கூட்டரில், 2.5 கி.வாட்.ஹார்., லித்தியம் அயான் பேட்டரி மற்றும் அதிக ரேஞ்ச் வழங்கும் ஹப் மோட்டர் பயன்படுத்தப்பட்டுள்ளன. முழு சார்ஜில், 113 கி.மீ., வரை பயணம் செய்யலாம். இந்த பேட்டரி, 750 வாட் வீட்டு சார்ஜரில், 80 சதவீதம் சார்ஜ் ஆக 2 மணி நேரம் 25 நிமிடம் எடுக்கிறது. இதில், 30க்கும் அதிமான பாதுகாப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
![]() |
ஸ்கூட்டரின் வெளிப்புறம் உலோகத்தால் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், எல்.சி.டி., டிஸ்ப்ளே, டிஸ்க் பிரேக், ஹில் ஹோல்டு அசிஸ்ட், டெலிஸ்கேபிக் போர்க், டூயல் ஷாக் அப்சார்பர்கள், 25 லிட்டர் பூட் ஸ்பேஸ் உள்ளிட்ட அம்சங்களும் கிடைக்கின்றன.
மொத்த ஆறு நிறங்களில் வரும் இந்த ஸ்கூட்டருக்கு, மூன்று ஆண்டு அல்லது 50,000 கி.மீ., வரை உத்தரவாதம் வழங்கப்படுகிறது.


