sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/கடையாணி/டாடா 'ஏஸ் கோல்டு பிளஸ்' குறைந்த பராமரிப்புடன் வரும் சின்ன யானை

டாடா 'ஏஸ் கோல்டு பிளஸ்' குறைந்த பராமரிப்புடன் வரும் சின்ன யானை

டாடா 'ஏஸ் கோல்டு பிளஸ்' குறைந்த பராமரிப்புடன் வரும் சின்ன யானை


UPDATED : அக் 08, 2025 09:15 AM

ADDED : அக் 08, 2025 08:25 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 08, 2025 09:15 AM ADDED : அக் 08, 2025 08:25 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'டாடா மோட்டார்ஸ்' நிறுவனம், 'ஏஸ் கோல்டு பிளஸ்' என்ற புதிய மாடல் இலகுரக சரக்கு வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த வாகனம், கன்டெய்னர், கேபின் சேசிஸ் என்ற வெவ்வேறு உடல் அமைப்புகளில் வருகிறது.

கடைசி மைல் விநியோகம், நகர்ப்புற சரக்கு போக்குவரத்து, சிறிய வணிகங்கள், இ - வணிகம் உள்ளிட்டவைக்கு, இது பயன்படுகிறது. இந்த வாகனத்தில், நச்சு வெளியேற்றம் மற்றும் பராமரிப்பை குறைப்பதற்காக, எக்ஸாஸ்ட் அமைப்பு மேம்படுத்தப் பட்டுள்ளது.

வெளியேறும் 'நைட்ரஸ் ஆக்சைடு' நச்சு உமிழ்வை அகற்றுவ தற்கு, 'எல்.என்.டி.,' என்ற புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இதனால், ஒவ்வொரு முறையும் 'ஏட் ப்ளூ' என்ற டீசல் எக்ஸாஸ்ட் திரவம் நிரப்ப வேண்டிய அவசியம் இருக்காது.

Image 1479475


இந்த வாகனத்தில், 900 கிலோ எடை வரை சுமந்து செல்ல முடியும். இதில், 2 சிலிண்டர், 702 சி.சி., டர்போ டீசல் இ ன்ஜின் பயன்படுத்தப் படுகிறது.

மொத்தம் இரண்டு பேர் பயணிக்கும் இந்த வாகனத்தில், 5 - ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் வழங்கப் பட்டுள்ளது. டாப் ஸ்பீடு 65 கி.மீ., டீசல் டேங்க் 30 லிட்டர், கிரவுண்ட் கிளியரன்ஸ் 160 எம்.எம்.,மாக உள்ளது.

இதில் ஹைட்ராலிக் ஸ்டீயரிங் இருந்தாலும், அதை ஓட்டுநர்கள் எளிதாக வளைக்கும் வகையில், மேம்படுத்தப் பட்டுள்ளதாக இந்நிறுவனம் கூறுகிறது.

சஸ்பென்ஷன்களில் எந்த மாற்றமும் இல்லை. முன்புற டிஸ்க், பின்புற டிரம் பிரேக்குகள், 12 அங்குல ரேடியல் டியூப்லெஸ் டயர்கள் உள்ளிட்டவை கிடைக்கின்றன. இந்த வாகனத்திற்கு, 3 ஆண்டுக ள், 1 லட்சம் கி.மீ., வரை உத்தரவாதம் வழங்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us