UPDATED : ஜூலை 09, 2025 09:03 AM
ADDED : ஜூலை 09, 2025 08:14 AM

'டாடா மோட்டார்ஸ்' நிறுவனம், 'ஏஸ் பிரோ' என்ற இலகுரக சரக்கு வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த வாகனம், 'பெட்ரோல், பெட்ரோல் - சி.என்.ஜி., மற்றும் மின்சார' மாடல்களில் வந்துள்ளது. இது, டீசல் மாடலில் இல்லை.
இந்த வாகனம், 750 கிலோ எடை வரை சுமக்கும் திறன் உடையது. 'ஹாப் டெக்', 'பிளாட் பெட்', 'கண்டெய்னர்' ஆகிய மூன்று உடல் அமைப்புகளில் வரும் இந்த வாகனத்தில், 694 சி.சி., 2 - சிலிண்டர், பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படுகிறது.
பெட்ரோல் மாடலுக்கு, 10 லிட்டர் டேங்க், சி.என்.ஜி., மாடலுக்கு, 45 லிட்டர் சி.என்ஜி., மற்றும் 5 லிட்டர் பெட்ரோல் டேங்க் வருகிறது.
இ.வி., மாடலில், 14.4 கி.வாட்.ஹார்., எல்.எப்.பி., லித்தியம் அயான் பேட்டரி பயன்படுத்தப்படுகிறது. ஒரு சார்ஜில், 155 கி.மீ., வரை பயணிக்க முடியும்.
'கிராஷ் டெஸ்ட்' செய்யப்பட்ட கேபின், 170 எம்.எம்., கிரவுண்ட் கிளியரன்ஸ், டிஜிட்டல் டிஸ்ப்ளே, ரிவர்ஸ் பார்க்கிங் அசிஸ்ட், வாகன கண்காணிப்பு அமைப்பு, கியர் ஷிப்ட் இன்டிகேட்டர் உள்ளிட்ட அம்சங்கள் இதில் உள்ளன.
மென்மையான பயணத்திற்காக, கார்களில் வரும் சஸ்பென்ஷன்கள் பயன்படுத்தப்படுகின்றன.