ADDED : செப் 16, 2026 07:41 AM
'டாடா' நிறுவனம், அதன் 'கர்வ்' எஸ்.யூ.வி., கூபே காருக்கு, 'சிரீஸ் எக்ஸ்' என்ற புதிய எடிஷனை அறிமுகம் செய்துள்ளது. அடிப்படைய மற்றும் நடு மாடல்களில் அதிக அம்சங்களை வழங்க, மொத்தம் ஆறு மாடல்களில் வந்துள்ளது. இன்ஜின், கியர்பாக்ஸ் உட்பட இயந்திர மாற்றங்கள் எதுவும் இல்லை.
'ஸ்மார்ட் எக்ஸ்' என்ற அடிப்படை மாடல், முன்பிருந்த அடிப்படை மாடலை விட 24,000 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. அடிப்படையாக, இரண்டாம் வரிசை பயணியருக்கு அதிக இடவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் கார்களுக்கும், மேனுவல், ஆட்டோ கியர்பாக்ஸ் கார்களுக்கும் இடையில் உள்ள விலை வித்தியாசம், 1.5 லட்சம் ரூபாயில் இருந்து, 1.3 லட்சம் ரூபாயாக குறைந்துள்ளது.
'ப்யூர் எக்ஸ்' என்ற இரண்டாவது மாடல் முதல், 10.25 அங்குல டிஸ்ப்ளே, போன் இணைப்பு வசதிகள், ஆட்டோ ஏ.சி., க்ரூஸ் கன்ட்ரோல், எலக்ட்ரானிக் வெளிப்புற கண்ணாடிகள் ஆகிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. 10.25 அங்குல கிளஸ்டர், யூ.எஸ்.பி., சி டைப் பாஸ்ட் சார்ஜிங், கூல்டு கிளவ் பாக்ஸ் இதர உயர்ரக மாடல்களில் வருகின்றன.
