டாடா 'எல்.பி.டி., 812' லாரி நான்கு சக்கரத்தில் ஐந்து டன் பேலோட்
டாடா 'எல்.பி.டி., 812' லாரி நான்கு சக்கரத்தில் ஐந்து டன் பேலோட்
UPDATED : அக் 01, 2025 08:41 AM
ADDED : அக் 01, 2025 08:39 AM

'டா டா மோட்டார்ஸ்' நிறுவனம், 'எல்.பி.டி., 812' என்ற நடுரக சரக்கு லாரியை அறிமுகம் செய்துள்ளது. இது, நான்கு சக்கரங்களில், 5 டன் எடையை சுமக்கும் திறன் கொண்ட நாட்டின் முதல் லாரியாகும்.
இந்த லாரி, இ - வணிகம், தொழில்துறை, உணவு சரக்கு வினியோகங்களுக்கு பயன்படுத்தப்படும். இதில், 3.3 லிட்டர், 4 - சிலிண்டர், டீசல் இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது. போக்குவரத்து நெரிசலில், வாகனத்தை எளிதாக இயக்க மென்மையான 5 - ஸ்பீடு கியர் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
![]() |
டாடாவின் 'எல்.பி.டி.,' உற்பத்தி தளத்தில் உருவாக்கப்படும் இந்த லாரியில், ஏசி கேபின், பவர் ஸ்டீயரிங், ஏர் பிரேக்குகள், ஹெவி ட்யூட்டி ரேடியல் டயர்கள், வாகன இணைப்பு வசதிகள் உள்ளிட்ட அம்சங்கள் கிடைக்கின்றன. ஆறு சக்கர லாரிகளுக்கு நிகரான திறன் உடைய இந்த லாரிக்கு, மூன்று லட்சம் கி.மீ., அல்லது மூன்று ஆண்டுகள் வரை அடிப்படை உத்தரவாதம் வழங்கப்படுகிறது.