டாடா டியாகோ 2026 சி.என்.ஜி.,க்கு ஆட்டோ கியர்பாக்ஸ்
டாடா டியாகோ 2026 சி.என்.ஜி.,க்கு ஆட்டோ கியர்பாக்ஸ்
UPDATED : ஜூன் 03, 2026 07:25 AM
ADDED : ஜூன் 03, 2026 07:18 AM

'டாடா மோட்டார்ஸ்' நிறுவனம், அதன் 'டியாகோ' ஹேட்ச்பேக் காரை மேம்படுத்தி, 2026 மாடலில் அறிமுகம் செய்துள்ளது. மொத்தம் ஆறு மாடல்களில் வரும் இந்த காரில், உட்புற, வெளிப்புற மாற்றங்கள், கூடுதல் அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே உள்ள 1.2 லிட்டர், 3 சிலிண்டர், என்.ஏ., பெட்ரோல் மற்றும் சி.என்.ஜி., இன்ஜின்கள் தொடர்கின்றன. இரு இன்ஜின்களுக்கும், 5 - ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 'ஏ.எம்.டி.,' ஆட்டோ கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. சி.என்.ஜி., மாடல் முதல் முறையாக ஆட்டோ கியர்பாக்ஸில் வருகிறது.
![]() |
காரின் பம்பர்கள், முன்புற ஹெட்லைட், கிரில், டெயில் லைட், ஸ்பாய்லர், 15 அங்குல அலாய் சக்கரங்கள் உள்ளிட்டவை புதுப்பிக்கப்பட்டுள்ளன.
உட்புறத்தில், 10 அங்குல இரு டிஸ்ப்ளே, புதிய டேஷ் போர்டு மற்றும் ஸ்டீயரிங் வடிவமைப்பு, ஒயர்லெஸ் சார்ஜிங் மற்றும் இணைப்பு வசதிகள், க்ரூஸ் கன்ட்ரோல், 4 - ஸ்பீக் கர் அமைப்பு, பின்புற ஏ.சி., வென்ட் ஆகிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
6 காற்று பைகள் அடிப்படையாக கிடைக்கும் நிலையில், மாடலை பொறுத்து, 360 டிகிரி கேமரா, பார்க்கிங் சென்சார்கள் உள்ளிட்டவை கிடைக்கின்றன.
இந்த கார், மொத்த ஆறு நிறங்களில் வந்துள்ளது.

