ADDED : நவ 05, 2025 08:05 AM

'டா டா மோட்டார்ஸ்' நிறுவனம், அதன் 'எல்.பி.ஒ., 1822' என்ற புதிய 'ஏசி' சொகுசு பஸ்சை அறிமுகம் செய்துள்ளது. நீண்ட துார பயணத்திற்கு உருவாக்கப்பட்டுள்ள இந்த பஸ்சில், 36 முதல் 50 பேர் வரை பயணம் செய்யலாம். இந்த பஸ், சீட்டர் மற்றும் ஸ்லீப்பர் உட்புற அமைப்புகளில் வந்துள்ளது.
இதில், 5.6 லிட்டர் 'கம்மின்ஸ்' டீசல் இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது, 220 ஹெச்.பி., பவர், 925 என்.எம்., டார்க்கை வெளிப்படுத்துகிறது. இந்த இன்ஜின், 6 - ஸ்பீடு மேனுவல் கியர்பாக்சுடன் இணைக்கப்பட்டுள்ளது. டிரைவர் சோர்வை குறைக்க பவர் ஸ்டீயரிங், பயணிகளுக்கு சொகுசான பயணத்தை வழங்க ஏர் சஸ்பென்ஷன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
வலுவான லேடர் பிரேம் சேசிஸில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த பஸ்சில், அதிர்வுகள் மற்றும் சத்தம் குறைவாக இருக்கும் என டாடா நிறுவனம் கூறுகிறது. பஸ் பயண மற்றும் செயல்பாட்டு நிலவரத்தை உடனுக்குடன் தெரிந்து கொள்ள 'டாடா ப்ளீட் எட்ஜ் டெலிமேட்டிக்ஸ்' அமைப்பு, 4 ஆண்டுகள் இலவசமாக வழங்கப்படுகிறது.

