ADDED : ஏப் 23, 2025 09:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'டெஸ்லா' நிறுவனம், அதன் 'மாடல் ஒய்' மின்சார காரின் சோதனை ஓட்டத்தை உள்நாட்டில் துவக்கி உள்ளது. 'மாடல் ஒய்' மற்றும் 'மாடல் 3' ஆகிய இரு மின்சார கார்களையும், இந்நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது.
இந்நிலையில், இந்த இரு கார்களுக்கான தகுதிச் சான்றிதழை பெற, இந்திய சாலைகளில் சோதனை ஓட்டத்தை துவக்கியது. டெஸ்லா 'மாடல் ஒய்' கார், கடந்த ஜனவரி மாதம், மேம்படுத்தப்பட்டு உலக சந்தையில் அறிமுகமானது. இந்த கார், ஒரு சார்ஜில், 719 கி.மீ., வரை செல்லும் திறன் உடையது.
உற்பத்தி ஆலை அமைப்பதற்கு பதிலாக, இறக்குமதி முறையில் விற்பனையை துவங்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஐரோப்பிய, சீனா உள்ளிட்ட சந்தைகளில், டெஸ்லா கார்களின் விற்பனை சரிந்த நிலையில், அதை ஈடுகட்ட, இந்தியாவை அடுத்த முக்கிய சந்தையாக பார்க்கிறது இந்நிறுவனம்.

