ADDED : ஜூலை 05, 2025 11:49 PM

மில் உரிமையாளரும், ஓப்பன் எண்ட் மில் அசோசியேஷன் தலைவருமான அருள்மொழி, டெஸ்லா ஒய் கார் வைத்துள்ளார்.
''எனக்கு டெஸ்லா ஒய் கார் பிடிக்கும் என தெரிந்து கொண்ட, அமெரிக்காவில் வசிக்கும் எனது மகன், எனக்காக இந்த டெஸ்லா இ.வி.,காரை வாங்கினார். நான் அங்கு செல்லும்போதெல்லாம், இந்த காரைதான் பயன்படுத்துவேன்,''
''அமெரிக்காவில் வாகனங்களுக்கான, போக்குவரத்து வசதிகள் அருமையாக திட்டமிடப்பட்டுள்ளன. ஆங்காங்கே ஹைவேக்களில், சார்ஜிங் ஸ்டேஷன்கள் உள்ளன. அங்கு 20 நிமிடத்தில் முழுமையாக சார்ஜ் ஏற்றி விட்டு, தொலை துார பயணத்தை மேற்கொள்ளலாம். விரைவில் கோவைக்கு கொண்டு வருவேன்,''
''காரில் பாதுகாப்பு வசதிகள் எப்படி?''
''ஆட்டோ பைலட் வசதி உள்ளது. டிரைவர் துணையின்றி சென்சாரை பயன்படுத்தி, தானே இயங்கும். ஜி.பி.ஆர்.எஸ்.,ல் செல்லுமிடத்தை, 'பிக்ஸ்' செய்து விட்டால் நாம் செல்ல வேண்டிய இடத்துக்கு, கச்சிதமாக கொண்டு போய் சேர்த்து விடும்,''
''அதிக குளிரின் போது, பயன்படுத்துவதற்கு 'ஹீட் பம்ப்'உள்ளது. வெளியே உள்ள காற்று காரினுள் செல்வதற்கு முன், அதை சுத்தப்படுத்தி உள்ளே அனுப்பும்,'ஏர்ப்யூரிபையர்' வசதி உள்ளது. இப்படி நிறைய வசதிகள் உண்டு,''.