ADDED : ஜூலை 24, 2024 11:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'மஹிந்திரா' நிறுவனம், ஆகஸ்ட் 15ம் தேதி அதன் புதிய '5 டோர் தார்' எஸ்.யூ.வி.,யை அறிமுகப்படுத்த உள்ளது. இதற்கு தார் ராக்ஸ் என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த கார், மாருதி ஜிம்னி எஸ்.யூ.வி.க்கு நேரடி போட்டி ஆகும்.
இது, பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களிலும், ஆட்டோ மற்றும் மேனுவல் கியர் பாக்ஸ்களிலும் வர உள்ளது. கூடுதலாக, ரியர் வீல் டிரைவ் மற்றும் 4 வீல் டிரைவ் ஆகிய இரு வகையிலும் வர உள்ளது.
பொலேரோ மற்றும் ஸ்கார்பியோ எஸ்.யூ.வி.க்களுக்கு இடையில் இதன் விலை நிர்ணயிக்கப்படும். அதாவது, 16 லட்சம் ரூபாய் முதல் 22 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.