மேட்டார் 'ஏரா' மேனுவல் கியர்பாக்ஸில் வரும் முதல் இ.வி., பைக்
மேட்டார் 'ஏரா' மேனுவல் கியர்பாக்ஸில் வரும் முதல் இ.வி., பைக்
UPDATED : நவ 19, 2025 08:17 AM
ADDED : நவ 19, 2025 08:08 AM

'மேட்டர்' நிறுவனம், 'ஏரா' என்ற மின்சார பைக்கை தமிழகத்தில் அறிமுகம் செய்துள்ளது. இது, மேனுவல் கியர்பாக்ஸ் வசதியுடன் வரும் இந்தியாவின் முதல் மின்சார பைக்காகும். இந்த பைக், '5000' மற்றும் '5000 பிளஸ்' என இரு மாடல்களில் கிடைக்கிறது.
இதில், 5 கி.வாட்.ஹார்., ஆற்றல் கொண்ட லிக்விட் கூல்டு லித்தியம் அயான் பேட்டரி வழங்கப்படுகிறது. ஒரு சார்ஜில், 125 கி.மீ., வரை பயணிக்க முடியும். முழு சார்ஜ் செய்ய, பாஸ்ட் சார்ஜர் வாயிலாக இரண்டு மணி நேரமும், ஏ.சி., சார்ஜர் வாயிலாக ஆறு மணி நேரமும் எடுத்து கொள்கிறது.
![]() |
இந்த பைக்கின் மோட்டாருடன் 4 - ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பைக், மின்சார பைக்காக இருந்தாலும், கியரை குறைக்கும் போது, இன்ஜின் பிரேக்கிங் உணர்வை வழங்கும் வகையில் மென்பொருள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக இந்நிறுவனம் கூறுகிறது.
7 அங்குல டச் ஸ்கிரீன், ஸ்மார்ட் போன் இணைப்பு வசதி, நேவிகேஷன், மூன்று ரைட் மேடுகள், இரு டிஸ்க் பிரேக்குகள், 17 அங்குல அலாய் சக்கரங்கள், சிங்கிள் சேனல் ஏ.பி.எஸ்., 3.5 லிட்டர் பூட் ஸ்பேஸ், டெலிஸ்கோப்பிக் மற்றும் டூயல் ஷாக் சஸ்பென்ஷன்கள் என பல்வேறு அம்சங்கள் இதில் இருக்கின்றன. இந்த பைக்கிற்கு, 3 ஆண்டு உத்தரவாதமும், பேட்டரிக்கு வாழ்நாள் உத்தரவாதமும் வழங்கப்படுகிறது. வாடகை பேட்டரி முறையிலும் இந்த பைக் கிடைக்கிறது.


