ஸ்கிராம்பிளர் 400 எக்ஸ்.சி., ட்ரையம்பின் முரட்டு ஆப்ரோடிங் பைக்
ஸ்கிராம்பிளர் 400 எக்ஸ்.சி., ட்ரையம்பின் முரட்டு ஆப்ரோடிங் பைக்
UPDATED : ஜூலை 16, 2025 11:23 AM
ADDED : ஜூலை 16, 2025 08:09 AM

'ட்ரையம்ப்' நிறுவனம், 'ஸ்கிராம்பிளர் 400 எக்ஸ்.சி.,' என்ற புதிய மாடல் பைக்கை அறிமுகம் செய்துள்ளது. இது, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும், இந்நிறுவனத்தின் விலை உயர்ந்த பைக் ஆகும்.
'ஸ்கிராம்பிளர் 400 எக்ஸ்' பைக்குடன் ஒப்பிடுகையில், இதில் கூடுதல் ஆப்ரோட் அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அலாய் சக்கரங்களுக்கு பதிலாக, 'கிராஸ் ஸ்போக்' சக்கரங்கள், டியூப் லெஸ் டயர்கள், அலுமினியத்தால் ஆன பலமான இன்ஜின் 'பேஷ் பிளேட்' மற்றும் கிராஷ் கார்டு, விண்டு வைஸர், டர்ட் பைக்கில் வரும் மட் கார்டு ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. இதனால், பைக்கின் எடை, 5 கிலோ அதிகரித்து, 190 கிலோவாக உயர்ந்துள்ளது. கிரவுண்ட் கிளியரன்ஸ் 195 எம்.எம்., பெட்ரோல் டேங்க் 13 லிட்டராக உள்ளன. இந்த பைக்கில், ஏற்கனவே உள்ள 398 சி.சி., லிக்விட் கூல்டு, சிங்கிள் சிலிண்டர், பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது.
இதில், 6 - ஸ்பீடு கியர் பாக்ஸ் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் இணைக்கப்பட்டுள்ளன. யூ.எஸ்.டி., போர்க் மற்றும் மோனோ ஷாக் சஸ்பென்ஷன்கள், 19 மற்றும் 17 அங்குல சக்கரங்கள், யூ.எஸ்.பி., சி - டைப் சார்ஜிங் போர்ட், டூயல் சேனல் ஏ.பி.எஸ்., ஸ்விட்சபில் டிராக் ஷன் கன்ட்ரோல் உள்ளிட்டவை இதர அம்சங்கள். இந்த பைக், மூன்று புதிய நிறங்களில் கிடைக்கிறது.

