ADDED : டிச 18, 2024 09:36 AM

'டொயோட்டா' நிறுவனம், அதன் 'கேம்ரி' செடான் காரை மேம்படுத்தி, 9ம் தலைமுறையில் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த காரின் முன்பதிவுகள் துவங்கி உள்ள நிலையில், வினியோகம் இந்த மாதம் முதல் ஆரம்பமாகிறது.
நேர்த்தியான முன்புற மற்றும் பக்கவாட்டு டிசைன், மெல்லிசான டி.ஆர்.எல்., லைட்டுகள், புதிய 18 அங்குல அலாய் சக்கரங்கள், சி - வடிவ டெயில் லைட்டுகள் ஆகியவை 'லெக்சஸ்' காரின் ஆடம்பரத்தை பிரதிபலிக்கிறது.
இதன் ஹைபிரிட் இன்ஜின் மேம்படுத்தப்பட்டு, பவர் 12 ஹெச்.பி., அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதில், 'இ - சி.வி.டி.,' ஆட்டோ கியர் பாக்ஸ் பயன்படுத்தப்படுகிறது. இதன் மைலேஜ், 25.49 கி.மீ., ஆக உள்ளது.
உட்புறத்தில், 12.3 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, 10 அங்குல ஹெட்ஸ் அப் டிஸ்பிளே, வெண்ட்டிலேட்டட் சீட்டுகள், மூன்று ஜோன் ஆட்டோ ஏ.சி., சன் ரூப், அடிப்படை அடாஸ் பாதுகாப்பு, பின்புற சீட் ரிக்லைன் வசதி ஆகியவை புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.
போட்டியாளரான 'ஸ்கோடா சூப்பர்ப்' காரை விட, இந்த காரின் விலை 6 லட்சம் ரூபாய் குறைவு.