டி.வி.எஸ்-., அப்பாச்சி ஆர்.ஆர்., 310 சூப்பர் பவர், தெறிக்கும் வேகம்
டி.வி.எஸ்-., அப்பாச்சி ஆர்.ஆர்., 310 சூப்பர் பவர், தெறிக்கும் வேகம்
UPDATED : அக் 02, 2024 12:07 PM
ADDED : அக் 02, 2024 09:12 AM

'டி.வி.எஸ்., மோட்டார்' நிறுவனம், அதன் 'அப்பாச்சி ஆர்.ஆர்., - 310' பைக்கை புதுப்பித்து அறிமுகப்படுத்தி உள்ளது. பைக்கின் செயல்திறனை அதிகரித்து, கூடுதல் அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
பெரிய ஏர்பாக்ஸ், எடை குறைந்த பிஸ்டன் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டுள்ளதால், பழைய பைக்கை ஒப்பிடுகையில், 4 ஹெச்.பி., பவரும், 1.7 என்.எம்., டார்க்கும் அதிகரித்துள்ளது. அதிக பிக்கப் கிடைக்க, பைக்கின் பக்கவாட்டில் விங்லெட் பொருத்தப்பட்டுள்ளது.
இது, காற்றை எளிதாக கிழித்து, பைக்கின் அதிவேக நிலைத்தன்மையை அதிகரிக்கிறது.
மேலும், கார்னரிங் ஏ.பி.எஸ்., டிராக்ஷன் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல், அட்ஜெஸ்ட்டபில் சஸ்பென்ஷன்கள், டயர் பிரஷர் மானிட்டரிங் அமைப்பு, குயிக் ஷிப்டர் வசதி என, பல்வேறு அம்சங்களும் இதில் உள்ளன.
இந்த பைக், கே.டி.எம்., ஆர்.சி., 390 ஸ்போர்ட்ஸ் பைக்கிற்கு கடும் சவாலாக உள்ளது.