டி.வி.எஸ்., 'கிங் இ.வி., மேக்ஸ்' நாட்டின் முதல் ப்ளூடூத் ஆட்டோ
டி.வி.எஸ்., 'கிங் இ.வி., மேக்ஸ்' நாட்டின் முதல் ப்ளூடூத் ஆட்டோ
ADDED : ஜன 29, 2025 09:12 AM

'டி.வி.எஸ்., மோட்டார்' நிறுவனம், 'கிங் இ.வி., மேக்ஸ்' என்ற மின்சார பயணியர் ஆட்டோவை அறிமுகப்படுத்தி உள்ளது. இது, நாட்டின் முதல் ப்ளூடூத் இணைப்பு வசதி கொண்ட ஆட்டோ ஆகும்.
நகர்ப்புற போக்குவரத்துக்காக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஆட்டோவில், 9.5 கி.வாட்.ஹார்., லித்தியம் அயான் எல்.எப்.பி., பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு சார்ஜில், 179 கி.மீ., வரை பயணிக்க முடியும்.இதை, 80 சதவீதம் வரை பாஸ்ட் சார்ஜிங் செய்ய, 2 மணி 15 நிமிடம் ஆகிறது. டிரைவர் உட்பட மூன்று பயணியர் வரை இந்த ஆட்டோவில் பயணிக்கலாம். இந்த ஆட்டோவின் மொத்த எடை 457 கிலோவாக உள்ளது. மேலும் இதில், எகோ, சிட்டி மற்றும் பவர் என மூன்று ரைட் மோடுகள் உள்ளன. அதிகபட்சமாக, 60 கி.மீ., வேகத்தை எட்ட முடியும். எல்.இ.டி., லைட்டுகள், 50 செ.மீ., நீரில் பயணிக்கும் திறன், ப்ளூடூத் இணைப்பு மற்றும் நேவிகேஷன் வசதிகள் ஆகியவை இதன் சிறப்பம்சங்கள்.
இந்த ஆட்டோவுக்கு, 6 ஆண்டுகள் அல்லது 1.50 லட்சம் கி.மீ., வரை உத்தரவாதம் வழங்கப்படுகிறது. தற்போது, வட மாநிலங்களில் வந்துள்ள இந்த ஆட்டோ, படிப்படியாக நாடு முழுதும் அறிமுகப்படுத்தப்படும் என, இந்நிறுவனம் அறிவித்துள்ளது.

