ADDED : ஆக 04, 2026 10:04 PM

'டி .வி.எஸ்.,' நிறுவனம், 'ரைடர் 125 டாக்டர் டூம்' என்ற சிறப்பு எடிஷன் பைக்கை அறிமுகம் செய்துள்ளது. அவெஞ்சர்ஸ் ஹாலிவுட் திரைப்படத்தில் வந்த வில்லன் கதாபாத்திரத்தின் அடிப்படையாக கொண்டு இந்த பைக் வந்துள்ளது.
இந்த பைக்கின் வெளிப்புற டிசைனில் மாற்றம் இல்லை. பெட்ரோல் டேங்க், சைடு பேனல்களில் டாக்டர் டூம் கிராபிக்ஸ், பச்சை நிற வெளிப்புறம் ஆகியவை இந்த பைக்கை தனித்துவப்படுத்துகிறது. இந்த பைக்கில் எந்த இயந்திர மாற்றங்களும் செய்யப்படவில்லை.
'அயன் மேன், பிளாக் பேன்ந்தர், டெட்பூல், உல்வரின், டாக்டர் டூம்' என ஐந்து 'சூப்பர் ஸ்குவாட்' எடிஷன்களில் இந்நிறுவன பைக்குகள் வருகின்றன. ஐந்து லட்சத்திற்கு அதிகமான சூப்பர் ஸ்குவாட் எடிஷன் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பைக்கின் விலை, 95,320 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது.
